ADDED : ஆக 03, 2025 04:38 AM

பாலமேடு : பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார்,கருப்பு சுவாமி கோயில் ஆடி உற்ஸவம் ஜூலை 26ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது.
3 நாள் நடந்த விழாவில் ஆக.1ல் மறவர்பட்டி கிராமம் சென்று அய்யனார், கருப்புசாமி, பட்டத்துக்கு குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஊர்வலமாக சுவாமி கண் திறப்பு இடத்திற்கு வந்தனர். தீவட்டி அலங்காரத்துடன், நகைபெட்டி எடுத்து வந்து சுவாமி கண் திறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று கோயிலில் இருந்து வடத்தை மஞ்சமலை ஆற்றுக்கு எடுத்து வந்தனர்.
பாரம்பரிய முறைப்படி 19 மரியாதை காளைகள் வடத்தில் பூட்டப்பட்டது. முன்னதாக காளைகளுக்கு வேட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வடத்தில் பூட்டிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து தொட்டு வணங்கினர். இன்று (ஆக.,3) பொது மகாசபை மடத்தில் பல்லயம் பிரித்தல் நடக்கிறது.