ADDED : ஆக 03, 2025 04:09 AM

வாடிப்பட்டி : செமினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதிஸ்வரன், அக்னி கருப்புசாமி, ஜடா முனீஸ்வரர் கோயில் உள்ளது.
ராகு, கேது நிவர்த்தி தலமான இங்கு ஆடித்திருவிழா 2 நாட்கள் நடந்தது. ஜூலை 23ல் கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
28ல் முத்தாலம்மன், அனைத்து எல்லை காவல் தெய்வங்களை வழிபாடு செய்து, கச்சைக்கட்டி நீலமேகப் பெருமாள் கோயிலில் சீர்பாதம் தாங்கிகள் முன்னிலையில் அபிஷேகம் செய்தனர்.
எல்லை காவல் தெய்வம் அக்னி கருப்பசாமி, ஜடா முனீஸ்வரர், பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தனர்.
கரந்தமலை கன்னிமார் சுவாமி தீர்த்தம், உத்திரகோசமங்கை தீர்த்தம் உள்ளிட்டவற்றால் 21 வகை அபிஷேகம் ஆராதனை பூஜை நடந்தது.
கிடா வெட்டி அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழு, ஆதி கொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

