/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அப்பாடா...; ஆங்கில புத்தாண்டு முதல் குற்றங்களை தடுக்க பெரியார் பஸ் ஸ்டாண்டில் இரவில் தங்க தடை

ADDED : ஜன 01, 2025 06:48 AM

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க இரவில் நடைமேடைகளில் தங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இப்பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி அலைபேசி, நகை பறிப்பு, பணம் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதற்காகவே சிலர் பயணிகள் போல் அங்கேயே நடைமேடைகளில் இரவு தங்குகின்றனர். ரோந்து வரும் போலீசார் விசாரிக்கும்போது 'கடைசி பஸ்சை தவறவிட்டுவிட்டோம். அதிகாலையில் முதல் பஸ்சில் புறப்பட்டு விடுவோம்' என்று கூறி திசை திருப்புகின்றனர்.
இவர்களால்தான் குற்றங்கள் நடப்பதை உறுதிசெய்த திடீர்நகர் போலீசார், இரவில் நடைமேடைகளில் யாரும் தங்கக்கூடாது. ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் ஆந்திராவைச் சேர்ந்த அவுலா சிவராம், குக்குலா சின்னா, சையத் ப்ரிதாஷ் உட்பட 4 பேர், ஒன்றாவது நடைமேடையில் பயணி ஒருவரிடம் ரூ.5500 திருடியதாக கைது செய்யப்பட்டனர். பரமக்குடியைச் சேர்ந்த அழகம்மாள் 49, திருடுவதற்காகவே வண்டியூரில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.
பஸ் ஸ்டாண்டில் கூட்டமாக பஸ் ஏறும்போது பர்ஸ், பைகளில் நகை, அலைபேசிகளை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரையும் கைது செய்து உள்ளோம். தற்போது இரவில் யாரும் தங்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்ததன்மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.