ADDED : அக் 16, 2025 05:16 AM
திருப்பரங்குன்றம்: அக்.16---: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தின விழா நடந்தது. தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் கலாம் படத்திற்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிர்வாகிகள் அண்ணாமலை, வேட்டையார், காளிதாசன், குலசேகரன், அரவிந்தன், கிருஷ்ணசாமி, சங்கரய்யா, கந்தராஜ், லட்சுமணன், ராமகிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, துளசிதாஸ், ரவிச்சந்திரன், ஹார்வி மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், விளையாட்டு குழுத் தலைவர் பாஸ்கரபாண்டி கலந்து கொண்டனர்.
சோழவந்தான்: மன்னாடிமங்கலம், தென்கரையில் அப்துல்கலாம் அறிவியல் மன்றம், பாரஸ்ட் ஹை ஹார்ட்புல்னெஸ் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், ஹார்ட்புல்னெஸ் தாலுகா பொறுப்பாளர் சங்கரபாண்டி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ரமேஷ் கலந்து கொண்டார். மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
மன்றத் துணைத் தலைவர் பாண்டி, சிவன்காளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.