/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக அரசுக்கு ஏ.பி.வி.பி., கண்டனம்
/
தமிழக அரசுக்கு ஏ.பி.வி.பி., கண்டனம்
ADDED : ஆக 14, 2025 03:01 AM
மதுரை: 'தேசிய கல்விக் கொள்கையை நகலெடுத்து மாநில கல்விக் கொள்கையாக அறிவித்துள்ளனர்' என தி.மு.க., அரசுக்கு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு (ஏ.பி.வி.பி.,) கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தி.மு.க., அரசுக்கு கிடையாது என்பதை அவர்களின் அண்மைச் செயல்கள் வெளிப்படையாக காட்டுகின்றன. தேசிய கல்விக் கொள்கை 2020ன் முக்கிய அம்சங்களை அப்படியே நகலெடுத்து, பெயரை மட்டும் மாற்றி 'மாநில கல்விக் கொள்கை' என அறிவிப்பது, கல்வி மேம்பாட்டுக்கான திட்டமல்ல. அரசியல் நாடகம் மட்டுமே.
அரசுப் பள்ளிகளை சரியாக நடத்த இயலாமல், இந்த கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் 207 பள்ளிகள் மூடப்பட்டன என்பது மிகப்பெரிய அவலம். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாமை, மாணவர் சேர்க்கை குறைவு போன்றவற்றுக்கு தீர்வு காணாமல், ஆட்சிப் பிழைகளை மறைக்கவே இக்கல்விக் கொள்கை நாடகம் நடத்தப்படுகிறது.
காகிதத்தில் மட்டும் புதிய கல்விக் கொள்கையை அறிவிப்பது தி.மு.க., அரசின் பொய்மை, மக்கள் நலனில் அக்கறை இன்மையை காட்டுகிறது. அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்க ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மாணவர்கள் வாழ்வில் அரசியல் நோக்கில் செயல்படும் தி.மு.க., அரசை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.