UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியின் உன்னத் பாரத் அபியான் சார்பில் பெருங்குடி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயகுமார் பேசுகையில், '' பெருங்குடி கிராம மக்களுக்கு ஸ்பைருலினா மைக்ரோகிரீன், ஆலிவ்ரா மற்றும் பேக்கரி பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார். தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
