/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர் வடிகால் பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் ஓட்டைகள்
/
கழிவுநீர் வடிகால் பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் ஓட்டைகள்
கழிவுநீர் வடிகால் பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் ஓட்டைகள்
கழிவுநீர் வடிகால் பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் ஓட்டைகள்
ADDED : ஏப் 22, 2025 06:26 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் ஓட்டை விழுந்துள்ள கழிவுநீர் வடிகால் கான்கிரீட் பாலத்தால் விபத்து தொடர்கிறது.
இக்காலனி அம்பேத்கார் நகர் நுழைவு பகுதியில் கழிவுநீர் வடிகால் மேல் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் 2 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து ஓட்டைகள் விழுந்து கம்பிகள் தெரிகின்றன. டூவீலரில் வருபவர்கள், சைக்கிளில் வரும் சிறுவர்கள் இந்த ஓட்டைகளில் சிக்கி காயமடைகின்றனர். இப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.
இங்குள்ள தெருக்களில் வடிகால்களை சுத்தம் செய்து பல மாதங்களாகிறது. கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் மழை நேரங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. தெருவில் 'பேவர் பிளாக்' பதிக்கும் போது ஓட்டையை சீரமைத்து தர கூறியும் நடவடிக்கை இல்லை. சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.