/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெள்ளைக் கோடுகள் இல்லாததால் விபத்து
/
வெள்ளைக் கோடுகள் இல்லாததால் விபத்து
ADDED : ஏப் 21, 2025 06:29 AM
பேரையூர்: நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்கும் வெள்ளைக் கோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
பேரையூர் - உசிலம்பட்டி, சாப்டூர், எம். சுப்புலாபுரம், டி.கல்லுப்பட்டி, வத்றாப் பகுதி மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் ரோட்டின் நடுவே, பக்கவாட்டில் வெள்ளைக் கோடுகள் இல்லை.
வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்தில்லா பயணத்தை உருவாக்க ரோடுகளில் வெள்ளை கோடுகள் போட வேண்டும்.
இந்த ரோடு மார்க்கர் எனப்படும் வெள்ளைக் கோடுகள் இரவுநேர பயணங்களில் பேருதவியாக இருக்கும். மேற்கண்ட பகுதி நெடுஞ்சாலையில் சரிவர வெள்ளை கோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.
வளைவான பகுதியில் வாகனங்களை திருப்பவும், வேகத்தடையில் வெள்ளைக் கோடுகளை பார்த்து வேகத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும். நெடுஞ்சாலைத் துறையினர் ரோடு ஆய்வு செய்து கோடுகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

