ADDED : ஆக 17, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் அருகே இடிந்த பாலத்தால் விபத்து அபாயம் உள்ளது.
இங்கு பொட்ட மடையில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் பிரிவுக்கு செல்லும் வழியில் வடகரை கால்வாயில் இருந்து இரும்பாடி கண்மாய்க்கு செல்லும் கிளைக்கால்வாய் பிரியும் இடத்தில் மடையுடன் கூடிய பாலம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு உடைகற்களால் பாலம் கட்டப்பட்டுள்ளது.
பழமையான பாலம் என்பதால் வலிமையிழந்து பக்கச்சுவர்கள் இடிந்து மடை சேதமடைந்துள்ளது. பாலம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையிலுள்ளது. இதன் வழியே ஏராளமான டூவீலர், கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் விபரீதம் விளைய அதிக வாய்ப்புள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
