ADDED : செப் 02, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான், செப்.3- –
சோழவந்தான், வாடிப்பட்டி ரோட்டில் பக்கவாட்டில் ஏற்படும் மண்ணரிப்பால் விபத்து அபாயம் உள்ளது. இங்கு அரசு பஸ் டெப்போவிலிருந்து ஆண்டிபட்டி பங்களா செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு அருகே மெயின் ரோட்டின் பக்கவாட்டில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரோட்டின் கீழே பக்கவாட்டில் பள்ளம் போல செல்கிறது. இதனால் ரோடு உடையவும், இரவில் போதுமான தெரு விளக்கு இல்லாததால் டூவீலர், கார் விபத்து ஏற்பட்டு விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.
