ADDED : ஆக 20, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்; பேரையூர் தாலுகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகளை ஆர்.டி.ஓ., உட்கர்ஸ்குமார், ஏ.எஸ்.பி., அஸ்வினி, தாசில்தார் செல்லப்பாண்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் ஆய்வு செய்தனர்.
டி. குன்னத்துார், வி.அம்மாபட்டி எம். சுப்புலாபுரம், காடனேரி விளக்கு, ஏ. பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புறவழிச் சாலைகள் உள்ள வளைவுகளில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை, பேரி கார்டுகள் வைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டனர். டி.கல்லுப்பட்டி அரசு பஸ் பணிமனையை பார்வையிட்டனர்.