ADDED : ஜன 22, 2025 04:30 AM
மதுரை: மதுரையில் நடந்த குடியரசு தின மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு கூடைபந்து, வாலிபால் போட்டிகளில் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் விளையாட்டு விடுதி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
வாலிபால் இறுதிப் போட்டியில் துாத்துக்குடி அணியை வென்று தங்கப்பதக்கம் வென்றனர். கூடைபந்து போட்டியில் 30 - 20 கணக்கில் தேனி விளையாட்டு விடுதி அணியிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர். கூடைபந்து வீரர் யாதேஷ்குமார் அகில இந்திய அளவில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றதோடு சிறந்த 'சூட்டர்' நட்சத்திர வீரருக்கான விருதை வென்றார். மாணவர்களை கலெக்டர் சங்கீதாபாராட்டினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், விளையாட்டு விடுதி மேலாளர் முருகன், பயிற்சியாளர்கள் ஆனந்தபாபு, பிரபு, தலைமையாசிரியர் ஷீலா, உடற்கல்வி இயக்குநர் ஷியாம் உடனிருந்தனர்.