
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் வென்ற கரடிபட்டி அக் ஷரா மெட்ரிக் பள்ளி மாணவிகள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இப்போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளியின் யாத்ரா (7 ம் வகுப்பு), தன்யா (6ம் வகுப்பு) ஆகியோர் இறகு பந்து இரட்டையர்கள் பிரிவிலும், ஜீவிதா (8 ம் வகுப்பு) சைக்கிள் போட்டியிலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். தாளாளர் பிரபா, உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.