sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றம் கோயில் மலை கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றியோர் மீது நடவடிக்கை

/

திருப்பரங்குன்றம் கோயில் மலை கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றியோர் மீது நடவடிக்கை

திருப்பரங்குன்றம் கோயில் மலை கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றியோர் மீது நடவடிக்கை

திருப்பரங்குன்றம் கோயில் மலை கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றியோர் மீது நடவடிக்கை

4


ADDED : ஜன 10, 2026 06:57 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:57 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார் போலீசில் புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எந்த விதமான முன் நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன்.

நீதிமன்ற உத்தரவை கோயில் நிர்வாக அறங்காவலர் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றாமல் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு காலம் தாழ்த்தியுள்ளனர்.

தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் நீதிபதியின் உத்தரவு எந்த விதமான தடையும் இல்லாமல் நடைமுறையில் இருக்கும் போது கடந்த டிச., 21 இரவு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 30 முஸ்லிம் நபர்கள், போலீஸ் உதவி ஆணையர் சசிபிரியா உள்ளிட்ட 20 போலீசார் நள்ளிரவில் டார்ச் லைட் உள்ளிட்ட சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஸ்தல விருட்சமான கல்லத்தி மரத்தில் சட்ட விரோதமாகவும், ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடும், மத மோதலை உருவாக்க வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்தோடு அடாவடித்தன மாக இஸ்லாமிய மத சந்தனக்கூடு அடையாளக் கொடியை கட்டி உள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொது செயலாளர் ராமலிங்கம் உடன் சென்றார்.






      Dinamalar
      Follow us