/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புகாருக்கு 3 நாட்களில் நடவடிக்கை: நீதிபதி
/
புகாருக்கு 3 நாட்களில் நடவடிக்கை: நீதிபதி
ADDED : ஜன 23, 2025 04:28 AM
மேலுார்: சிட்டம்பட்டி தனியார் மகளிர் கல்லுாரியில் மேலுார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் சவரியம்மாள் வரவேற்றார். சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா தலைமை வகித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவர் பேசுகையில், ''நீதிமன்றத்தில் இருந்து வரும் குற்ற வழக்கு பிரச்னையை கையாளும் விதம், கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர் படுத்துவது, அலைபேசியில் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்பு மற்றும் மெசேஜூகளுக்கு பதில் அளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், மாணவிகளுக்கு பிரச்னை இருந்தால் அலைபேசியில் வட்ட சட்டப் பணி குழுவுக்கு நேரடியாக, தபால் மூலமாக புகார் கொடுத்தால் 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். வழக்கறிஞர்கள் ஜோதிமணி, வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டனர்.

