/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீடு வாங்குவது மக்களின் கனவு 'கிரடாய்' கண்காட்சியில் நடிகர் சரத்குமார் பேச்சு
/
வீடு வாங்குவது மக்களின் கனவு 'கிரடாய்' கண்காட்சியில் நடிகர் சரத்குமார் பேச்சு
வீடு வாங்குவது மக்களின் கனவு 'கிரடாய்' கண்காட்சியில் நடிகர் சரத்குமார் பேச்சு
வீடு வாங்குவது மக்களின் கனவு 'கிரடாய்' கண்காட்சியில் நடிகர் சரத்குமார் பேச்சு
ADDED : பிப் 02, 2025 05:08 AM

மதுரை : ''வீடு வாங்குவது மக்களின் கனவாக உள்ளது,'' என இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில் மதுரை தமுக்கம் கன்வென்ஷன் ஹாலில் நடைபெறும் வீடு மற்றும் வீட்டடி மனைகள் (பேர்புரோ புராப்பட்டீ எக்ஸ்போ 2025) கண்காட்சியில் நடிகர் சரத்குமார் பேசினார்.
ஜன.31 ல் கண்காட்சி துவங்கியது. மதுரை, கோவை, சென்னையை சேர்ந்த 35 டெவலப்பர்கள், கான்கிரீட், பிளம்பிங், 'எம்' சாண்ட், ஜல்லி, உள் அலங்காரம், மின்சாதனம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ரூ.19.9 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீடுகள், ரூ.3 லட்சம் முதல் வீட்டடி மனைகளை (பிளாட்களை) தேர்வு செய்யலாம்.
பிளாட்கள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள், பிளாட்டுகளை நேரடியாக பார்வையிட வாகன வசதி உண்டு. வங்கிக் கடன் வசதி உண்டு.
குழந்தைகள் விளையாடி மகிழ 'கிட்ஸ் ஜோன்', அறுசுவை உணவு அரங்குகள் உள்ளன. பார்வையாளர்கள் 'கியூஆர் கோடு'வில் முன்பதிவு செய்யலாம்.
நேற்று 'வாழ்வின் வசந்தம் சொந்த வீடு' தலைப்பில் கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் பேசினார்.
'பசுமை வீடுகள்' தலைப்பில் நடிகர் சரத்குமார் பேசியதாவது: வீடு வாங்குவது மக்களின் கனவாக உள்ளது. சொந்த வீடு அவசியம். ராக்கெட் வேகத்தில் அனைத்து விலைகளும் ஏறுகின்றன. பட்ஜெட்டிற்கு ஏற்ற வீடு வாங்க நகரத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டியுள்ளது.
வீடு வாங்குவதில் சோதனைகளை சந்திப்பது பற்றிய கதையான '3 பிஎச்கே' படத்தில் நடிக்கிறேன். அதிக செலவின்றி, தரமான வீடு, சரியான இடத்தில் கட்ட வேண்டும் என்பது இளைஞர்களின் லட்சியம். புவி வெப்பமடைதலால் பாதிப்பு ஏற்படாதவாறு பசுமை வீடுகளை கட்ட வேண்டும். கிராமங்களில் வீடுகள் கட்டும் திட்டம், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க முயற்சி தேவை. வாழ்க்கையில் முன்னேற உழைப்பு, நியாயம், உறுதி, விடா முயற்சி அவசியம் என்றார்.
பார்வையாளர்களில் தினமும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசாக ரூ.3 லட்சம் மதிப்பில் பிளாட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி தேர்வான மதுரை வடிவேல்கரை சொர்ணராஜனுக்கு வழங்கப்பட்டது.
'கிரடாய்' தமிழக தலைவர் இளங்கோவன், மதுரை சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்துவிஜயன், செயலாளர் யோகேஷ், பொருளாளர் ஜெயகுமார் பங்கேற்றனர்.
இன்று (பிப்.2) காலை 10:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணியுடன் கண்காட்சி நிறைவடையும். 'கிரடாய்' விளம்பர துாதர் நடிகை சுகாசினி மாலை 6:00 மணிக்கு பங்கேற்கிறார். அனுமதி இலவசம். நிகழ்ச்சியை ஸ்டேட் வங்கி, அனுஜ் டைல்ஸ் இணைந்து வழங்குகின்றன.