/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பிரெஸ்டா' புதிய விளம்பர துாதராக நடிகை ஸ்ரீலீலா
/
'பிரெஸ்டா' புதிய விளம்பர துாதராக நடிகை ஸ்ரீலீலா
ADDED : ஜன 06, 2025 01:35 AM
மதுரை, ; 'பிரெஸ்டா' பெண்கள் ஆடைகளுக்கான புதிய விளம்பர துாதராக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் இயங்கும் 'பூமர் கிளாத்திங்' நிறுவனம், 'பிரெஸ்டா' என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை வழங்குகிறது. இதன் புதிய விளம்பர துாதராக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக இயக்குநர் மூர்த்தி கூறியதாவது: எங்களின் தயாரிப்புகளான 'லெக்கின்ஸ்', 'ஸ்லிப்ஸ்', உள்ளாடைகள், காட்டன் பேன்ட், 'டர்கி' பேன்ட், குர்தீஸ் பேன்ட், நைட்டி உள்ளிட்டவற்றுக்கு வரவேற்பு உள்ளது. நுால் உற்பத்தி, சாயமிடுதல், சலவை, பிரின்டிங் என அனைத்து செயல்பாடுகளும் எங்கள் நிறுவனங்களிலேயே நடப்பதால் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வழங்க முடிகிறது. எங்கள் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், விற்பனையை மேம்படுத்தவும் நடிகை ஸ்ரீலீலாவை விளம்பர துாதராக ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார்.

