/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் ரோப்கார் பணிக்கு கூடுதலாக 22 சென்ட் நிலம்
/
திருப்பரங்குன்றம் ரோப்கார் பணிக்கு கூடுதலாக 22 சென்ட் நிலம்
திருப்பரங்குன்றம் ரோப்கார் பணிக்கு கூடுதலாக 22 சென்ட் நிலம்
திருப்பரங்குன்றம் ரோப்கார் பணிக்கு கூடுதலாக 22 சென்ட் நிலம்
ADDED : பிப் 17, 2024 05:15 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைக்க மலை அடிவாரத்தில் கூடுதலாக தேவைப்படும் 22 சென்ட் இடத்தை தனியாரிடம் வாங்க கோயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சுனை தீர்த்தம் உள்ளது. இங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. குன்றத்து மலை மேல் ரோப் கார் அமைக்க அரசு முடிவு செய்தது. சென்னை ஐடி காட் நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.
அவர்களது பரிந்துரையில் அடிவாரத்தில் கோயில் இடம் தவிர கிரிவல ரோட்டை ஒட்டியுள்ள பகுதியில் 22 சென்ட் தனியார் நிலத்துடன் ரோப் கார் பணிகள் மேற்கொண்டால் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசினர். அவர்களும் நிலத்தை வழங்க சம்மதித்துள்ளனர்.