/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்காக கூடுதல் கதவுகளை பூட்டலாம்
/
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்காக கூடுதல் கதவுகளை பூட்டலாம்
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்காக கூடுதல் கதவுகளை பூட்டலாம்
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்காக கூடுதல் கதவுகளை பூட்டலாம்
ADDED : நவ 28, 2024 05:32 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட வாசல்கள் உள்ள நிலையில் பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்பு கருதி அவற்றை பூட்டுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
டீன் அலுவலகத்தைச் சுற்றி முதல் மாடியில் காது, மூக்கு, தொண்டை, பிளாஸ்டிக் சர்ஜரி, வாஸ்குலர் சர்ஜரி, கண் பிரிவு வார்டுகள் உள்ளன. இங்கிருந்து உள்ளே வரவும், வெளியே செல்லவும் 6 வாசல்கள் உள்ளன. தீவிர சுவாச சிகிச்சை பிரிவு, நச்சுத்துறை பிரிவில் 2 வாசல்கள் உள்ளன.
காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படுவதால் ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ய நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மதியம் முதல் இரவு 8:00 மணி வரை உள்நோயாளிகளின் வார்டுகளில் உறவினர்கள் வந்து செல்வர். இரவில் நோயாளிகள் துாங்கும் நேரம், எல்லா கதவுகளும் திறந்த நிலையில் இருப்பது டாக்டர், நர்ஸ், பணியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவுகளில் ஒரே கதவு என்பதால் பிரச்னையில்லை. வெளிப்புற வளாகத்தில் உள்ள பிரிவுகள் பூட்டப்பட்டிருக்கும். சர்க்கரை நோய் பிரிவின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தாலும் வெளிப்புற நோயாளிகளின் இருக்கையில் இரவு நேரத்தில் துாங்குமிடமாக பயன்படுத்துகின்றனர்.
மருத்துவமனைக்குள் தாக்குதல் என்பது சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்புக்கு போலீசாரை நியமிப்பது ஒரு நடவடிக்கை என்றாலும், நடமாட்டம் இல்லாத வாயிற் கதவுகளை மூடுவது பாதுகாப்பை உறுதிசெய்யும்.