/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சந்தையில் ஆடு விற்க கூடுதல் கட்டணம் வசூல்
/
சந்தையில் ஆடு விற்க கூடுதல் கட்டணம் வசூல்
ADDED : ஏப் 23, 2025 04:30 AM
டி.கல்லுப்பட்டி :  டி.கல்லுப்பட்டி பேரூராட்சியின் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடக்கிறது. ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுத்து நடத்துகின்றனர். ஆடுகளை விற்கவும், வாங்கவும் அதிகளவில் விவசாயிகள் வருகின்றனர்.
வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று நடந்த சந்தைக்கு 5000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இங்கு ஆடு ஒன்றுக்கு ரூ. 50 கட்டணமாக ஒப்பந்ததாரர்கள் வசூலித்து வந்தனர். ஆனால் ஒரு மாதமாக ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஒப்பந்ததாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், ''கடந்த மாதம் வரை ஒரு ஆட்டுக்கு ரூ.50 ரூபாய் வசூலித்தவர்கள், தற்போது கட்டாயப்படுத்தி கூடுதலாக வசூலிக்கின்றனர்.  பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

