/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடு வளர்ப்போருக்கு கூடுதல் வருவாய்
/
ஆடு வளர்ப்போருக்கு கூடுதல் வருவாய்
ADDED : ஏப் 13, 2025 05:37 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் இருந்து ஏலத் தோட்டத்திற்கு உரத்திற்காக ஆட்டுச்சாணத்தை லாரிகளில் கேரளா கொண்டு செல்கின்றனர்.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கில் வெள்ளாடுகள் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பகலில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளை இரவில் கொட்டத்தில் அடைக்கின்றனர். கொட்டத்தில் சேகரமாகும் ஆட்டுச் சாணத்தை உரத்திற்காக சணல் பைகளில் கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஆட்டுச் சாணத்தில் மண்ணின் வளத்திற்கு தேவையான இயற்கை சத்துக்கள் அதிகளவு உள்ளது. இதனை உரமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு பாதிப்பு இல்லை. உள்ளூர் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கிடைகள் அமைத்து ஆடுகளை சில வாரங்கள் தங்க வைக்கின்றனர். இதன் மூலம் ஆட்டுச் சாணம் நிலத்தில் நேரடியாக கலந்து விடுகிறது. ஆட்டுச் சாணம் கேரளாவுக்கு லாரி மூலம் அனுப்பப்படுவதால் ஆடு வளர்ப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கணிசமான வருவாய் கிடைக்கிறது என்றனர்.

