UPDATED : மே 06, 2026 05:00 PM
ADDED : மே 06, 2026 04:51 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்குமுன் மதுரை நகருக்குள் இரவில் பெய்த மழையால் ரோடுகளில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்தது. நகரையொட்டிய பகுதிகளிலும் இதன் தாக்கம் இருந்தது.
மே 5 ஆம் தேதி இரவிலும் மதுரை நகரில் தல்லாகுளம், பெத்தானியாபுரம், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மாவட்ட அளவில் உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிபட்டி, விமானநிலையம், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
மழையளவு விவரம் (மி.மீ.,): மதுரை வடக்கு 44.7, தல்லாகுளம் 39.8, பெரியபட்டி 6.4, விரகனுார் 14.2, சிட்டம்பட்டி 10.8, இடையபட்டி 7, வாடிப்பட்டி 69, சோழவந்தான் 40, சாத்தையாறு அணை 3.6, மேட்டுப்பட்டி 12.2, ஆண்டிபட்டி 54.2, உசிலம்பட்டி 55, குப்பணம்பட்டி 23, விமான நிலையம் 35, திருமங்கலம் 38.2, பேரையூர் 44.2, எழுமலை 9.4, கள்ளிக்குடி 18.4.
அணைகளில் நீர்மட்டம் பெரியாறு அணையில் 110.15அடி நீர்மட்டம் உள்ளது. (அணையின் மொத்த உயரம் 152 அடி). அணையில் 935 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 292 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 27.53 அடி (மொத்த உயரம் 71). அணையின் நீர் இருப்பு 281 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.
சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 2.60 அடி. (மொத்த உயரம் 29). அணையில் நீர் இருப்பு 1.91 மில்லியன் கனஅடி. அணையில் நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை.
