sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அதலையில் அடிப்படை வசதி இல்லா ஆதி திராவிடர் மயானம்

அதலையில் அடிப்படை வசதி இல்லா ஆதி திராவிடர் மயானம்

அதலையில் அடிப்படை வசதி இல்லா ஆதி திராவிடர் மயானம்


ADDED : பிப் 12, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 05:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: அதலையில் ஆதிதிராவிடர் சமுதாய பயன்பாட்டில் உள்ள மயானத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தோர் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய எவ்வித வசதியும் இல்லை.

மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். பரவை ரோட்டில் பொது மயானத்தில் இறந்தோர் உடலை எரிக்க தகரம் மற்றும் சிமென்ட் கொட்டகை உள்ளது. இதன் அருகே ஆதி திராவிட சமுதாய மக்களுக்கு இடம் மட்டுமே உள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் அமைத்த தகர கொட்டகை சேதமடைந்து 10 ஆண்டுகளாகிறது. இறந்தோர் உடலை எரிக்கவும், சடங்குகளை செய்வதற்கும் எந்த வசதியும் இல்லை. வெயில் மழையில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இவ்வூரைச் சேர்ந்த மணி கூறுகையில், ''எங்கள் கிராம மயானத்தில் எந்த வசதியும் இல்லை. பத்தாண்டுகளாக மனு அளித்து வருகிறேன். கடந்த ஆகஸ்டில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.17.60 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து தர நிர்வாக அனுமதி கோரப்பட்டுள்ளது என பி.டி.ஓ., தரப்பில் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை, என்றார்.

ஊராட்சித் தலைவர் அழகு சுதா கூறுகையில், ''மயான பணிக்கு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us