நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்க ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில்  ஆடிப்பூர வைபவம் நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திருப்பாவை, வாரணம் ஆயிரம் பாசுரங்கள் சேவிக்கப்பட்டு, ஆண்டாளிடம் இருந்து பெருமாளுக்கு மாலை சாற்றப்பட்டது. திருவாராதனம் முடிந்து பெருமள் பிரசாதத்தை ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர்.
பொதுமக்கள் நோய், நொடியின்றி வாழவும், தர்மம் செழிக்கவும் பிரார்த்திக்கப்பட்டது. பங்கேற்றவர்களுக்கு வளையல்  வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர ராமகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் ராஜம் மீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா, ஆலோசகர் வெங்கட்ராமன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, மஞ்சுளா, உத்ரா  உட்பட பலர் பங்கேற்றனர்.

