ADDED : டிச 21, 2024 05:52 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலத்தில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. புதிய முகவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் மாணிக்கம், நீதிபதி, தவசி, கருப்பையா, மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டனர்.
