ADDED : பிப் 27, 2024 06:24 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலக திறப்பு விழா முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், பிரபுசங்கர், ராமையா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் துரைப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளிக்குடி ஒன்றியம் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. அ.ம.மு.க., கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
