ADDED : பிப் 15, 2024 05:47 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று அவரை அங்கீகரித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அருகே சீட் ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,வினர் திருமங்கலத்தில் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி, ஜெ., பேரவை செயலாளர் தமிழழகன், துணைத் தலைவர் ஜெகன், கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு சங்கர், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் பங்கேற்றனர்.
