/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம்
/
அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம்
ADDED : ஜன 12, 2026 05:41 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட சோழவந்தான் தொகுதி சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திர மணியன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி முன்னாள் செயலாளர் பாண்டுரங்கன், வழக்கறிஞர் அணி அழகர்சாமி, காசிநாதன், வெள்ளைச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
அலங்காநல்லுார் - தனிச்சியும் ரோட்டில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

