தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வளரிளம் பருவ விழிப்புணர்வு

 வளரிளம் பருவ விழிப்புணர்வு

 வளரிளம் பருவ விழிப்புணர்வு


ADDED : பிப் 09, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் குறிஞ்சி சுகம் வட்டாரம், சுகம் அறக்கட்டளை சார்பில் வளர் இளம் பருவ பெண்களுக்கான முன்மாதிரி கல்வியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் வள்ளி, சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் வினோதினி பயிற்சி நோக்கத்தை விளக்கினார். மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா முன்மாதிரி கல்வியாளர் பொறுப்புகள், பெண்களுக்கான சுய சுகாதாரம், இரும்புச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள், நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து பேசினார்.

பயிற்சியாளர் விஜயலட்சுமி யோகாசன பயிற்சி அளித்தார். மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. சுகம் வட்டார சுகாதாரப் பணியாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us