/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரியில் 'அக்ரி டெக்னோவா' கருத்தரங்கம்
/
கல்லுாரியில் 'அக்ரி டெக்னோவா' கருத்தரங்கம்
ADDED : டிச 21, 2025 05:15 AM
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் 'அக்ரி டெக்னோவா' எனும் சர்வதேச கருத்தரங்கம், முதல்வர் பாண்டியராஜா தலைமையில் நடந்தது.
உணவு, நார், கால்நடை தீவனம், எரிபொருள், உரங்கள் ஆகிய 5 துறைகளில் உலகளாவிய உற்பத்தி அமைப்புகளை உருவாக்கும் முன்னோடித் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி இக்கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் சாய் கண்ணன் வரவேற்றார்.
சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன், நிலைத்த வேளாண் மாற்றங்கள், உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு, கட்டுப்படுத்தப்பட்ட சூழல் வேளாண்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் பேசினார். சிறந்த ஆய்வுப் பங்களிப்புகள் வழங்கியவர்களுக்கு பரிசு, கல்வி மேன்மை விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் விஜி ஒருங்கிணைத்தார்.

