/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் வணிகத்துறையின் '‛பண்ணை வாயில் வர்த்தகம்'
/
வேளாண் வணிகத்துறையின் '‛பண்ணை வாயில் வர்த்தகம்'
ADDED : ஜன 26, 2025 04:35 AM
மதுரை :  மதுரை வேளாண் வணிகம் மற்றும் வணிகத்துறை சார்பில் 'பண்ணை வாயில் வர்த்தக' முறையில் விவசாயிகளின் விளைபொருட்கள் வயலிலேயே விற்கப்படுவதாக வேளாண்மை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மேலுார் ஆமூர் கிராம விவசாயி ஈஸ்வரதாஸின் 14 டன் அக் சயா நெல் மூடை, சந்தானகிருஷ்ணனின் 18 டன் நெல் வயலில் வைத்தே விற்று கொடுக்கப்பட்டது. டி.கல்லுப்பட்டி தொட்டியபட்டி கிராம விவசாயி ராம்கண்ணனின் 850 கிலோ வரகு திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ - நாம் முறையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேரையூர் சதுரகிரி  கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 1.5 டன் மக்காச்சோளம் பண்ணை வாயில் முறையில் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்கப்பட்டது.
மாங்குளம், அரிட்டாபட்டி பகுதிகளில் இருந்து 240 மூடை அக் சயா நெல் மாட்டுத்தாவணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டு அதற்கான பொருளீட்டு கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பயிர் அறுவடை காலங்களில் விவசாயிகள் 'பண்ணை வாயில் வர்த்தக' முறையை பயன்படுத்தி விளைபொருட்களை எளிதாக விற்கலாம். வணிகத் துாதுவர்களாக அறிமுகப்படுத்த விவசாயிகள் மூலம் இத்திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய வேண்டும் என்றார்.

