ADDED : டிச 22, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் திட்டப்பணிகள் குறித்து வேளாண் வணிக இணை இயக்குநர் அமுதன் ஆய்வு செய்தார். சொக்கிக்குளம் உழவர் சந்தையை பார்வையிட்டு காய்கறிகளின் வரத்தை அதிகரிக்க உத்தரவிட்டார். கே.கே.நகரில் உள்ள அக்மார்க் ஆய்வகத்தையும் வாடிபட்டியில் நடந்த தேங்காய் ஏலத்தையும் முக்கம்பட்டியில் நடைபெறும் உணவு பூங்காவின் கட்டமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
வேளாண் துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி, மதுரை விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, வேளாண் அலுவலர்கள், மாநில வேளாண் விற்பனை வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.