ADDED : ஆக 13, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: நெடுங்குளம், தேனுார் உள்ளிட்ட பகுதிகளில் கோதுமைப்புல் எனும் களை வகை முளைத்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வேளாண் இணை இயக்குனர் முருகேசன் தலைமையில் துணை இயக்குனர் சாந்தி, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, உதவி அலுவலர் தங்கையா ஆய்வு செய்து காக்கும் வழிமுறைகளை கூறினர்.