ADDED : ஏப் 09, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வாப்ஸ் நிறுவனம் சார்பில் வேளாண் தொழில் முனைவோருக்கான திட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது. வேளாண் வணிக கூட்டமைப்பு, கரூர் வைஸ்யா வங்கி ஏற்பாடுகளை செய்தன. திட்ட அலுவலர் சுப்புராஜன் வரவேற்றார்.
வாப்ஸ் செயலாளர் அருள், வங்கி மேலாளர்கள் தனம், சண்முகம், வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் திட்டம் குறித்து பேசினர். அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
