/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் பயிர்களில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை
/
நெல் பயிர்களில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை
நெல் பயிர்களில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை
நெல் பயிர்களில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை
ADDED : டிச 22, 2024 07:16 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி சார்பில் தென்கரை மேலமட்டையன், கீழமட்டையான், ஊத்துக்குளி புதுார், சித்தலங்குடி கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் துங்ரோ நச்சுயிரி, இலையுறை அழுகல்,பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
மதுரை வேளாண்மை கல்லுாரி வேளாண் அறிவியல் நிலையத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் நோயியல் துறை பேராசிரியர் மாரீஸ்வரி, உதவி இயக்குனர் பாண்டி, வேளாண் அலுவலர் தீபா ஞானசுந்தரி, துணை அலுவலர் பெருமாள், உதவி அலுவலர்கள் தங்கையா ஆய்வு செய்தனர்.
இவ்வகையான நோய்கள் பாசி படலம் படிந்த வயல்களில் மிகுதியாக இருப்பதால் இதனை கட்டுப்படுத்த அதிக துார்கட்டும் பருவத்தில் காப்பர் சல்பேட் ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் ஒரு கிலோ மணலில் கலந்து நெல் வயலில் விசிறி விட வேண்டும்.
துங்ரோ நச்சுயிரி நோய் பச்சை தத்து பூச்சிகளை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் மருந்தை 0.5மி.லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பாக்டீரியல் இலை கருகல் மற்றும் இலையுறை அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
நெல் வயல்களில் நோய்கள் தீவிரமாக பரவ முக்கிய காரணம் வயல் வரப்புகள் மற்றும் வயல்களில் களைகள் அதிகம் காணப்படுவதால் தான். எனவே வயல் வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.