நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் விரகனுார் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பார்த்திப ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஓம் சந்திரன், பொன் ராஜேந்திரன், கணேசன், சாகுல்ஹமீது முன்னிலை வதித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, அமைப்புச் செயலாளர் காந்தி, பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் பேசினர். கிளைச் செயலாளர்கள் செல்லப்பாண்டி, தனசேகர பாண்டியன், காசிவிஸ்வநாதன் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.