ADDED : ஜன 12, 2026 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகரில் மறைந்த முதல்வர் அண்ணாதுரை பெயரில் இருந்த பூங்கா பெயரை 'ஸ்டெம் பூங்கா' என மாநகராட்சி மாற்றியுள்ளது. இப்பூங்காவில் ஹாக்கி உள்பட பலவிளையாட்டு மைதானங்களும் உள்ளன. இதன் ஒரு பகுதியில் ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக மாற்ற பணிகள் நடக்கிறது.
இந்நிலையில் மாநகராட்சி 'ஸ்டெம் பூங்கா' என பெயர் பலகை வைத்ததால், அ.தி.மு.க., நிர்வாகிகள், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜன் செல்லப்பா கூறுகையில், ''பல ஆண்டுகளாக இருந்த அண்ணாதுரையின் பெயரை நீக்கி, ஸ்டெம் பூங்கா என மாற்றி குழப்பம் ஏற்படுத்துகின்றனர். மீண்டும் அவரது பெயரை வைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

