ADDED : ஏப் 06, 2025 05:22 AM
அ நிறம் | அளவு
மதுரை : அ.தி.மு.க., மாணவரணி சார்பில் இளம் பேச்சாளர்களை தேர்வு செய்தல் மற்றும் பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது.
மாநில மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் துவக்கி வைத்து பேசுகையில், ''சிந்தனையை துாண்டும், பேச வேண்டும். ரசனை, நாகரிகம், பண்பாடு, இதிகாச கருத்துக்களுடன் சுருக்கமாக இருக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை தெளிவாக கூற வேண்டும்'' என்றார்.
மாணவரணி துணைச் செயலாளர் குமார், நகர் மாவட்ட செயலாளர் பார்த்திபன், புறநகர் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், மகேந்திர பாண்டி பங்கேற்றனர்.
