/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'2026 பொங்கல் தினத்தில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படும்'
/
'2026 பொங்கல் தினத்தில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படும்'
'2026 பொங்கல் தினத்தில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படும்'
'2026 பொங்கல் தினத்தில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படும்'
ADDED : ஜூலை 05, 2025 02:36 AM

மதுரை:''வரும், 2026 பொங்கல் தினத்தன்று மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி செயல்பட துவங்கும்,'' என, எய்ம்ஸ் செயல் இயக்குநர் அனுமந்தராவ் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், ராமநாதபுரத்தில் மாணவர்கள் படிக்கின்றனர்.
அங்கு போதிய வசதி இல்லாததால் வாடகை கட்டடம் எடுக்க வேண்டியிருந்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டுமான பணி வேகமாக நடக்கிறது.
மருத்துவ கல்லுாரிக்கான பணிகள் டிசம்பரில் நிறைவடையும். 2026 பொங்கல் தினத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி புதிய கட்டடத்தில் செயல்படும். 2026 ஜனவரி இறுதிக்குள் கல்லுாரிக்கான ஆய்வகம், மாணவர்களுக்கான விடுதி வசதி செயல்படும்.
முதற்கட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 150 படுக்கைகளுடன் கூடிய கட்டடம் நிறைவடையும். 2027க்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும்.
மாதந்தோறும் கட்டட பணிகளின் அடுத்தடுத்த நிலைகள் குறித்த போட்டோ வெளியிடும்படி ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.