/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலைய நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகம் ஜப்தி அவகாசம் கேட்டதால் ஒத்திவைப்பு
/
விமான நிலைய நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகம் ஜப்தி அவகாசம் கேட்டதால் ஒத்திவைப்பு
விமான நிலைய நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகம் ஜப்தி அவகாசம் கேட்டதால் ஒத்திவைப்பு
விமான நிலைய நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகம் ஜப்தி அவகாசம் கேட்டதால் ஒத்திவைப்பு
ADDED : டிச 04, 2025 06:29 AM
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்திய வழக்கில், இழப்பீடு வழங்காத நில எடுப்பு தாசில்தார் அலுவலக வாகனம், பொருட்கள் ஜப்தி செய்ய வந்தவர்களிடம், ஒருமாத அவகாசம் கேட்டதால் ஜப்தியை ஒத்தி வைத்தனர்.
மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த ராஜேந்திரன், ஜெகதீசன் ,கார்த்திகேயன் ஆகிய சகோதர்களுக்கு சொந்தமான 17 ஏக்கர் 12 சென்ட் இடத்தை 2009 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை குறைவு. எனவே கூடுதலாக வழங்க வேண்டும் என விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தனித்தாசில்தாரிடம் முறையிட்டனர்.
அப்போது, 'கூடுதல் இழப்பீடு பெறுவதற்கான ஆவணங்கள் இருப்பதால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம்' என மனுதாரர்களுக்கு நிலஎடுப்பு அலுவலக அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி கடந்த 2022ல் மதுரை மாவட்ட 3வது கூடுதல் துணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022 நவம்பரில்் உரிய இழப்பீட்டு தொகையை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பு வந்து 2 ஆண்டுகளாகியும் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2. 92 கோடியை வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து இழப்பீட்டு தொகை வழங்க கோரி மீண்டும் 2024 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இழப்பீட்டு் தொகையை வழங்க தாமதப்படுத்துவதால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோரி மீண்டும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அந்த முறையீட்டு மனு மீதான தீர்ப்பில், நில எடுப்பு தனித்தாசில்தார் அலுவலக வாகனம், சேர்கள், கணினிகள், ஏசி, மின்விசிறிகள் உட்பட உபகரணங்களை போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி செய்ய நவ. 7 ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு நீதிமன்ற பணியாளர்கள், மனுதாரர் வழக்கறிஞர்களான விஷ்ணுவரதன், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.
இதையடுத்து தனித்தாசில்தார், வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவுக்கு வராத நிலையில், அலுவலக சேர்களை ஜப்தி செய்ய தொடங்கினர். பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒருமாத கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை ஒத்தி வைத்தனர்.

