/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித்
/
துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித்
ADDED : ஜன 12, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சினிமாவை தாண்டி நடிகர் அஜித்திற்கு கார் ரேஸில் அதிக ஆர்வம் உண்டு. துபாயில் நடந்து வரும் '24எச்' ரேஸில் அஜித் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றுள்ளது.
இதற்காக கடந்த சில தினங்களாக அஜித்தும், அவரது அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ரேஸில் இருந்து அஜித் விலகி உள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் '24எச்' கார் ரேஸில் இருந்து அஜித் விலகுகிறார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார். அவரது அணியினர் பங்கேற்பர்'' என அஜித் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

