/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கல்
/
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கல்
ADDED : டிச 28, 2025 06:14 AM
அலங்காநல்லுார்: டிச.28- -: அலங்காநல்லுாரில் 2026 ஜன., 17ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக ஜல்லிக்கட்டு விழா குழுவினர், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நேற்று காலை விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், முனியாண்டி, அய்யனார், கருப்பு சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து ஜல்லிக்கட்டு அழைப்பிதழை வைத்து வழிபட்டனர்.
பின் போட்டி நடக்கும் வாடிவாசலில் பூஜை செய்தனர். ஜல்லிக்கட்டு போட்டி அழைப்பிதழ், துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணிகளை துவங்கினர்.
இதில் விழா குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். முகூர்த்தகால் நடும் விழா அமைச்சர் மூர்த்தி, கலெக்டர், எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் முன்னிலையில் ஜனவரி முதல் வாரத்தில் நடக்கும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.

