/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 'ஐயோ பாவம்' அவசர சிகிச்சை பிரிவு
/
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 'ஐயோ பாவம்' அவசர சிகிச்சை பிரிவு
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 'ஐயோ பாவம்' அவசர சிகிச்சை பிரிவு
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 'ஐயோ பாவம்' அவசர சிகிச்சை பிரிவு
ADDED : ஜூலை 17, 2025 12:40 AM
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அடிக்கடி மேல் பகுதி இடிந்து விழுந்ததால் மூடப்பட்டு தற்காலிகமாக வேறு இடத்தில் செயல்படுகிறது.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 2 வது மெயின் கேட் பகுதியில் 15 படுக்கை வசதிகள், ஆப்பரேஷன் தியேட்டர், விபத்து சிகிச்சை பகுதி, மருத்துவர் தங்கும் அறை, விஷம் குடித்து வருவோருக்கு வயிறை சுத்தம் செய்யும் பகுதி உட்பட அனைத்து வசதிகளும் இருந்தன.
இந்த பிரிவு கட்டி 24 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், ஒரே ஆண்டில் 3 முறை கூரை இடிந்தும், காரை பெயர்ந்தும் விழுந்தது. அந்நேரம் நோயாளிகள், பணியாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அவசர சிகிச்சை பிரிவு நிரந்தரமாக மூடப்பட்டது.
தற்போது தற்காலிகமாக உள் நோயாளிகளுக்கான ஆண்கள் பிரிவு பகுதியில் செயல்படுகிறது. அந்தப் பகுதியில் 8 படுக்கைகளை அப்புறப்படுத்தி இடம் ஒதுக்கியுள்ளனர்.
ஏற்கனவே உள் நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லாத நிலையில், இருந்த படுக்கைகளை அகற்றி அவசர சிகிச்சை பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கான அனைத்து வசதிகளும் இல்லை. விபத்தில் சிக்கி வருவோரை உடனே மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். விஷம் அருந்தியோருக்கு வராண்டாவில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
எனவே பழைய அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை உடனே அகற்றிவிட்டு நவீன வசதிகளோடு புதிய கட்டடம் கட்டவும், அதுவரை வேறு இடத்தில் அனைத்து வசதிகளோடு அவசர சிகிச்சை பிரிவு செயல்படவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.