ADDED : ஆக 23, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக. 24– -
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ் 33. இவர் நேற்றிரவு மதுபோதையில் காரில் வேகமாக வீட்டிற்கு சென்றபோது கருப்பாயூரணி சந்தை அருகே முன்னால் சென்ற டூவீலரில் மோதி நிற்காமல் சென்றார்.
டூவீலர் நிலைத்தடுமாறி விழுந்ததில் தனது தந்தையுடன் சென்ற 14 வயது சிறுவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் வடமாவட்ட எஸ்.பி., தனக்கு தெரிந்தவர் என சந்தோஷ் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கருப்பாயூரணி போலீசார் காரை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
