/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சர்வதேச ஜூனியர் ஹாக்கி தயாராகும் அனைத்து அரசு துறைகள்
/
மதுரையில் சர்வதேச ஜூனியர் ஹாக்கி தயாராகும் அனைத்து அரசு துறைகள்
மதுரையில் சர்வதேச ஜூனியர் ஹாக்கி தயாராகும் அனைத்து அரசு துறைகள்
மதுரையில் சர்வதேச ஜூனியர் ஹாக்கி தயாராகும் அனைத்து அரசு துறைகள்
ADDED : அக் 23, 2025 03:36 AM
மதுரை: மதுரையில் நடக்கும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு அனைத்துத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அரசு கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.28 முதல் டிச.10 வரை 14வது ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஹாக்கி சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்றனர்.
மதுரையில் சர்வதேச போட்டி அரசு கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா கூறியதாவது: உலகம் முழுவதும் இருந்து 24 அணிகள் 6 பிரிவுகளில் மோத உள்ளன. நவ.28 முதல் டிச.10 வரை 10 போட்டிகள் சென்னை, மதுரையில் நடைபெறும். இதற்காக மாநகராட்சி சார்பில் வீரர்கள் தங்கும் இடம், போட்டி நடக்கும் இடங்களில் தடையற்ற நீர் வினியோகம், சாலை பழுது பார்ப்பு, அழகுபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். போலீஸ் துறை முழு பாதுகாப்பு, கூட்டக் கட்டுப்பாடு, வி.ஐ.பி., பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என்னென்ன நடவடிக்கைகள் தீயணைப்புத் துறை தீ பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறை முதலுதவி நிலையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
வீரர்கள் தங்குமிடம், உணவின் தரம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பொதுப்பணி, மின்சார வாரியத்தினர் சாலைகள், அரங்குகள், மின்வசதியை பராமரிக்க வேண்டும்.
போட்டிகளை மாணவர்கள் பார்வையிட, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் சர்வதேச அளவில் தமிழக மதிப்பை உயர்த்தும் வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.