ADDED : ஜன 26, 2025 04:36 AM
மதுரை : மதுரை யூனியன் கிளப்பில் ராமச்சந்திரன் நினைவு அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் 14 வயது பிரிவினருக்கான போட்டி நடக்கிறது.
ஆடவர் காலிறுதிக்குமுந்தைய சுற்றுப் போட்டிகள்:
விஷ்ணுராஜன் 8 - 0புள்ளிகளில் தனிஷ் வெள்ளைச்சாமியை வீழ்த்தினார். அமன் மாத்யூ 8 -7 புள்ளிகளில் துஷ்யந்தையும் நயன் கிருஷ்ணா 8 - 1 புள்ளிகளில் சர்வின் தேவராஜையும் வீழ்த்தினர். நிஜேஷ் நிகம் 8 - 6 புள்ளிகளில் சம்வ்ருத்தையும் அதன்யன் செல்வம் 8 - 5 புள்ளிகளில் அஸ்பக் அலியையும் வீழ்த்தினர். தவின் 8 - 1 புள்ளிகளில் ஸ்ரீ கிருஷ் மகேைஷயும் அகிலன் 8 - 1 புள்ளிகளில் அனிருத் வேலையும் நிகில் அழகப்பன் 8 - 4 புள்ளிகளில் பிரணவையும் வீழ்த்தினர்.
மகளிர் போட்டி முடிவுகள்
பவுசில் கிதயா 8 - 5 புள்ளிகளில் அதிதியையும் கனிஷ்கா 8 - 3 புள்ளிகளில் ஆதர்ஷினியையும் வீழ்த்தினர். ஆதிரை 8 - 1 புள்ளிகளில் புகழ்மதியையும் அஸ்விதா 8 - 5 புள்ளிகளில் உத்ராவையும் வீழ்த்தினர்.
ஹன்ஷி 8 - 3 புள்ளிகளில் ஸ்வேதாவையும் இனியா 8 - 3 புள்ளிகளில் ரக் ஷிதாவையும் வீழ்த்தினர். சாதனா 8 - 3 புள்ளிகளில் மாயாவையும் ஐஸ்வர்யா 8 - 4 புள்ளிகளில் தேஜைஸயும் வீழ்த்தினர்.

