ADDED : மார் 23, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் கிளையின் சார்பில் ஸ்ரீபராபவ ஆண்டு பஞ்சாங்க வெளியீட்டு விழா நடந்தது. கிளைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாநில தென்மண்டல தலைவர் அமுதன், மாவட்ட தலைவர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தனர்.
கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட, மதுரை கல்லுாரி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் சுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் ராஜம்மீனாட்சி, இளைஞரணி செயலளர் மீனாட்சிசுந்தரம் ஆலோசகர்கள் வெங்கட்ராமன், கல்யாணி, மகளிர் அணி இணைச்செயலாளர்கள் உமா, சித்ரா, செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், ரங்கநாதன், முத்துலட்சுமி, நாராயணன் பங்கேற்றனர்.
