நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : குலசேகரன் கோட்டை அருகே தர்மராஜன் கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை பூப்பல்லக்கில் உற்ஸவர், பச்சைப் பட்டு, வெள்ளிக் கிரீடம் அணிந்து வேல் ஏந்தி தெப்பத்தை வலம் வந்தார்.
மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.