தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : பிப் 26, 2024 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 07:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகர்கோவில் : மதுரை எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரியில் 1992- - 1995-இல் பயின்ற பி.காம்., மாணவர்களின் சந்திப்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கல்லுாரியில் நடந்தது.

இதில் முன்னாள் மாணவர்கள் 65 பேர் பங்கேற்றனர். அப்போது பணியாற்றிய பேராசிரியர்கள், தற்போதைய வணிகவியல் துறை பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாகத்தினரை அம்மாணவர்கள் கவுரவித்தனர். நடப்பு கல்வியாண்டில் பயிலும் வணிகவியல் துறை மாணவர்களுடன் தங்களின் அனுபங்களை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பாக ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். கல்லுாரிச் செயலர் ஜெயராமன், முதல்வர் சிவாஜி கணேசன், முன்னாள் பேராசிரியர்கள் சார்பில் ராமர், தீனதயாளன், துறை தலைவர் அசோக் பேசினர். முன்னாள் மாணவர்கள் இராமமூர்த்தி, ஜெரால்டு, மீனாட்சி, ஜெயகாந்தன், குமார், தாமோதரன், பழனிக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us