ADDED : டிச 30, 2024 06:45 AM

அ நிறம் | அளவு
மேலுார்: அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997 -- 98ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ராதிகா வரவேற்றார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் சந்தானம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வினோத் முன்னிலை வகித்தார்.
ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் மாணவர்கள் கட்டிக் கொடுத்த மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா மற்றும் கலந்துரையாடல் நடந்தது. மரக்கன்றுகள் நட்டனர்.
குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.
